யாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கிய மூதாட்டி தரையில் விழுந்ததை அவதானிக்காது பேருந்து நகர்ந்தவேளை பேருந்தில் தட்டி நிறுத்திய பயணியை தகாத வார்த்தையில் திட்டிய சாரதி தொடர்பில் நேற்று முன்தினம் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அண்மையில் மானிப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்து ஆனைக் கோட்டைப் பகுதியில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அவ்வாறு இறங்கிய மூதாட்டி வீதியில் ஒரு காலை வைத்த போதும் முழுமையாக இறங்காத நிலையில் சாரதி பேருந்தைச் செலுத்தியுள்ளார். இதனை அவதானித்த சக பயணி பேரூந்தில் தட்டி சைகை செய்துள்ளார்.

இதனை அவதானித்த சாரதி பேருந்தைத் தட்டியவரை தகாத வார்த்தைகளால் ஏசியதோடு ‘‘கண்ணாடி உடைந்தால் வேண்டித் தருவீர்களா’’ எனக்கோரியுள்ளார்.

இதன்போது குறித்த பயணி ‘‘கண்ணாடி உடைந்தால் நான் வழங்குகின்றேன். மூதாட்டி படுகாயமடைந்தால் நீங்கள் பராமரிப்பீர்களா?’’ எனக் கேட்டுள்ளார்.

குறித்த பயணி யாழ்ப்பாணத்தில் இறங்கியவேளையிலும் சாரதி குறித்த பயணியுடன் முரண்பட்டுக்கொண்டார்.

குறித்த விடயம் தொடரபில் யாழ்ப்பாண மாவட்ட சிற்றூர்தி சங்க தலைவர் பொ.கெங்காதரனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்ப ட்டதையடுத்து உரிய விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.