மோசமாக திட்டிய நபர் - பதிலடி கொடுத்த நிஷா கணேஷ்

டிவிட்டரில் மோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய ஒரு நபருக்கு நடிகை நிஷா கணேஷ்  தகுந்த பதிலடி கொடுத்தார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா காணேஷ். சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றனர். அப்போது பல புகைப்படங்களை எடுத்தனர். அதில் ஒன்றை நிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதைக்கண்ட ஒரு நபர் அவரை மோசமான வார்த்தையில் திட்டியிருந்தார். அதைக்கண்ட நிஷா ‘உன் தாயின் பெயரை நான் கேட்கவில்லை. தெரியப்படுத்தியதற்கு நன்றி’ என பதிலடி கொடுத்தார். மேலும், இதுபோன்ற நபர்களை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஊடகத்தில் வேலை செய்வது மற்ற மற்ற பணிகளைப் போலத்தான். ஆனால், ஏன் உடகங்களில் பணிபுரியும் பெண்களை மோசமானவர்களாகவே பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.