நயன்தாராவைப் பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன ரகசியம்

நயன்தாரா பற்றி முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ரிலீஸாகவுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் மூன்றாவது முறையாக நயனைப் பார்த்தாராம் சிவகார்த்திகேயன்.

அதற்கு முன்னர் ‘ஏகன்’ படத்தின் ஷூட்டிங்கிலும், ‘எதிர்நீச்சல்’ படத்தின் ஷூட்டிங்கிலும் பார்த்தாராம். ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார் நயன்தாரா. அந்தப் பாடலில் தனுஷுக்கு ஜோடியாக அவர் ஆடியிருப்பார்.

அந்தப் பாடலுக்கு ஆடியதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கிக் கொள்ளவில்லையாம் நயன்தாரா. இளைஞர்கள் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள் என்பதால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சும்மாவே ஆடிக் கொடுத்தாராம் நயன். இந்தத் தகவலை சமீபத்தில் கூறினார் சிவகார்த்திகேயன்.