இனிமேல் டைரக்சன் சரிப்படாது, நடிகராக மாறிய சுசீந்திரன்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் பல சொதப்பல்களை சந்தித்தது. இந்த படத்தின் முதல் பாதி முழுவதும் போரடிக்கும் காதல் காட்சி இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்ததும், தமிழ் சினிமா சரித்திரத்தில் முதல்முறையாக ஒரு படத்தில் உள்ள ஹீரோயின் காட்சி முழுவதையும் நீக்கினார் இயக்குனர் சுசீந்திரன்.

அப்படியும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் படத்தை திரையரங்கில் இருந்து தூக்கி விட்டு வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளார். ஆனால் எந்த திரையரங்கும் மீண்டும் இந்த படத்தை வெளியிட தயாராக இல்லை

இந்த நிலையில் இனிமேல் டைரக்சன் எல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, திடீரென ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருடன் இயக்குனர் மிஷ்கின் மற்றும் விக்ராந்த் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் விபரம் குறித்த தகவல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது. பாண்டியநாடு' படத்திற்கு பின்னர் வெற்றிப்படத்தை இயக்க முடியாத நிலையில் இருக்கும் சுசீந்திரன் நடிகராக தேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்