ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள்

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் ஜெய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'எத்தன்' இயக்குனர் சுரேஷ் இயக்கவுள்ளார்.

பாம்புகளை அடிப்படையாக கொண்டு 'நீயா' பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரஸா ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர். மூவருமே பாம்பு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக ஜெய் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.