மணிரத்னம் என்னுடைய ரசிகர் - சிம்பு போட்ட குண்டு

‘மணிரத்னம் என்னுடைய ரசிகராக இருக்கலாம்’ என புதிய குண்டைப் போட்டுள்ளார் சிம்பு.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். எனவே, சிம்புவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு, மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்று தகவல் பரவியது.

இந்நிலையில், ‘சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, “எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் என்னை வைத்துப் படம் எடுப்பதில் மணி சார் உறுதியாக இருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை? ஒருவேளை என்னுடைய ரசிகர்களைப் போல அவரும் எனக்கு ரசிகராக இருக்கலாம்.

ஜனவரி 20 முதல் என்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங் தொடங்குகிறது. தொடர்ந்து 3 மாதங்கள் அந்தப் படத்தில் நடிக்கிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.