அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தற்போது அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. அதர்வா  முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த `குலேபகாவலி' படத்திற்கு பிறகு படம் இல்லாமல் தவித்து வந்த ஹன்சிகாவுக்கு அடுத்த  பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்க இருக்கிறார். கிருஷ்ணா வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு  பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 

இந்த படத்தின் பூஜை நாளை தொடங்க இருப்பதாகவும், படப்பிடிப்பு வருகிற டிசம்பர் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளன.