மவுசு கூடிய உதயநிதி ஸ்டாலின்; முந்திக்கொண்ட விஜய் டிவி

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்தின் சேனல் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

பொதுவாக, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகுதான் அதன் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகும். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து விஜய் டிவி வாங்கியிருக்கிறது. ‘குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம் இது’ என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.