நெல்லியடிப்பகுதியில் இன்று புடவை கடையொன்று தீப்பற்றி உள்ளது

யாழ்ப்பாணம் நெல்லியடிப்பகுதியில் இன்று(06) காலை புடவை கடையொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.நெல்லியடி பிரதான வீதியில் உள்ள புடைவைக்கடையில் இன்று காலை 6.00 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் குறித்த தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டமையால் கடையில் பாரிய சேதம் ஏற்படவில்லை என தெரிய வருகிறது.

கடையில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே கடை தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் வருவதாகவும் தெரிய வந்துள்ளது.