கைதடிச் சந்தியில் பஸ்களை மறித்து இரவிரவாக சோதனை செய்த பொலிசார்!! பயணிகள் கடும் அவதி!!

யாழில் இருந்து கொழும்புக்கு செல்லும் பேரூந்துகளில் கேரளா கஞ்சாக்கள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி கொழும்பு செல்லும் அனைத்து பேருந்துகளும் நேற்று இரவு கைதடிச்சந்தியில் பொலிசாரின் சோதனைகளுக்கு உள்ளாகின.

இச் சம்பவத்தினால் கைதடிச்சந்தியில் அனைத்து பயணிகளின் உடைமைகள் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிசார் சோதனை செய்துள்ளனர் என பயணிகள் விசனம் தெரிவித்தனர்.