விஜய்-கலாநிதி மாறன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும்,

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் செய்யவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தாலும் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இன்று இந்த செய்தியும் உறுதி செய்யப்பட்டது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக சன் டிவி செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு 'எந்திரன்' படத்தை தயாரித்த கலாநிதி மாறன் எட்டு வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தை தயாரிக்கின்றார். விஜய்-கலாநிதிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.