சிவகார்த்திகேயன் எனக்கு போட்டியா? சந்தானம் பளிச்!!

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் சக்க போடு போடு ராஜா. இந்த படம்

டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சேதுராமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானம் மற்றும் வைபவி சாண்டில்யா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், விடிவி கணேஷ், ரேபோ சங்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய சந்தானம், சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகதான் இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு சக்க போடு போடு ராஜா படம் போட்டியாக இருக்கும் என்றார். இந்த படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.