தமிழில் அவுட், தெலுங்கில் சக்சஸான விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அண்ணாதுரை’ படம் தமிழில் அவுட்டானாலும், தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது.

சீனிவாசன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அண்ணாதுரை’. டயானா சாம்பிகா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அண்ணாதுரை - தம்பிதுரை என இரண்டு வேடங்களில், இரட்டையர்களாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து ராதிகா சரத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். தமிழில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதேசமயம், தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

நேற்று இந்தப் படத்தின் சக்சஸ் மீட், ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அதில், விஜய் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார்.