யாழ்ப்பாணத்தில் இந்தியப் பெண் கைது

யாழ். ஊ​ர்காவற்துறை பகுதியில் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊ​ர்காவற்துறை, சுருவில் பகுதியில் வைத்து குறித்த இந்தியப் பெண்ணை நேற்று மாலை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

47 வயதான இவர் குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவரை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p> </div>