முல்லைத்தீவில் குழந்தை திடீர் மரணம்

தொடர்ச்­சி­யாக அழு­து­கொண்­டிருந்த, பிறந்து 11 நாள்­க­ளே­யான குழந்தை நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தான் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

கைவேலி புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த ரிவா­னந்­தன் வவி­சன் என்ற குழந்­தையே உயி­ரி­ழந்­தான்.

நேற்­று ­முன்­தி­னம் தொடக்­கம் குழந்தை அழு­து­கொண்­டி­ருந்­தது. அன்று பிற்­ப­கல் புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு பின்­னர் மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டான்.

மேல­திக சிகிச்­சைக்­காக குழந்தை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டான். எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது குழந்தை உயி­ரி­ழந்­தான்.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­டார். சட­லம் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.