கரம்போட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டனர்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வெள்ளை மாவெடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கடம்போட் விளையாடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள்  மீது இனம்தெரியாத நபர்கள்  வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.