சாவகச்சேரியில் கஞ்சா என குப்பைச் சருகை பொலிசாருக்கு கொடுத்த கில்லாடிகள்!!

கஞ்சா கொள்­வ­ன­வா­ளர்­கள் போன்று நடித்து கஞ்சா விற்­ப­வர்­க­ளைக் கைது செய்­யச் சென்ற பொலி­ஸா­ருக்கு அவர்­கள் காய்ந்த மர இலைச் சரு­கு­களைக் கொடுத்­துள்­ள­னர். ஏமாற்­ற­ம­டைந்­தா­லும் பொலி­ஸார் இரு­வ­ரைக் கைது செய்­த­னர்.

சந்­தே­க­ந­பர்­க­ளி­டம் இருந்து கிராம் அள­வி­லான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் சாவ­கச்­சே­ரி­யில் நடந்­துள்­ளது. கஞ்சா கடத்­தல் மற்­றும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என்று கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் மன்­னா­ரில் இருந்து போதைப் பொருள் தடுப்­புப் பிரிவு பொலி­ஸார் நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

சாதா­ர­ண­மா­ன­வர்­கள் என்று அறி­மு­க­மா­கித் தமக்கு கஞ்சா வேண்­டும் என்று பொலி­ஸார் கேட்­டுள்­ள­னர். பொலி­ஸாரை ஒரி­டத்­துக்கு வரு­மாறு கூறப்­பட்­டது.

பொலி­ஸார் அங்கு சென்­றுள்­ள­னர். 2 கிலோ எடை­யு­டைய 5 பொதி­களை சந்­தே­க­ந­பர்­கள் பொலி­ஸா­ருக்­குக் கொடுத்­துள்­ள­னர்.

பொதி­களை அந்த இடத்­தி­லேயே பிரித்­துப் பார்த்­த­போது அதற்கு மரச் சரு­கு­களே இருந்­தன. பொலி­ஸார் ஏமாற்­ற­ம­டைந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தே­க­ந­பர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் அவர்­க­ளி­டம் இருந்து கிராம் கணக்­கி­லான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் கைது செய்­யப்­பட்டு சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.