கட்­டு­நா­யக்காவில் கைது செய்­யப்­பட்­ட யாழ் நபரின் 20 லட்சம் பெறுமதியான தங்கம் அரசுடைமையாகியது!

அர­சின் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி சுமார் 45 பவுண் தங்­கத்தை மலே­சி­யா­வி­லி­ருந்து கடத்­தி­வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் குற்­றத்தை ஏற்­றுக் கொண்­ட­தன் அடிப்­ப­டை­யில் 10 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்து நீர்­கொ­ழும்பு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். அவ­ரால் எடுத்­து­வ­ரப்­பட்ட 19 இலட்­சத்து 56 ஆயி­ரத்து 560 ரூபா பெறு­ம­தி­யான 355 கிராம் எடை­யு­டைய தங்­கத்தை அர­சு­டைமை­யாக்­கு­மா­றும் நீதி­வான் உத்­த­விட்­டார்.

மலே­சியா கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து வருகை தந்த பய­ணி­யி­டம் சோதனை மேற்­கொண்­ட­போதே தங்­கம் மீட்­கப்­பட்­டது. தங்­கத்தை நாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­கான அனு­ம­திப் பத்­தி­ரம் அவ­ரி­டம் இருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.