யாழிலிருந்து சென்ற பேரூந்து மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்ட ஐவருக்கு நேரப் போகும் கதி?

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் வைத்து நேற்­று­முன்­தி­னம் பஸ் வண்டி மீது கல் வீச்­சுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பில் பேருந்து நடத்­து­ந­ரும், சார­தி­யும் கன­க­ரா­ஜன் குளம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­த­னர்.”இது தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்டு சந்­தே­கத்­தில் 5 பேரைக் கைது செய்­துள்­ளோம். அவர்­கள் 25 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள்.விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்­கள் குற்­றத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்­பது தெரி­ய­வ­ரின் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர்’ என பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வெளி மாவட்­டங்­க­ளுக்கு இடை­யில் பணி­யில் ஈடு­ப­டும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பேருந்­து­கள் மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­தும் சம்­ப­வங்­கள் சில மாதங்­க­ளா­கத்தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­மை­யும் குறிப்­பி­டத் தக்­கது.