ஆவா குழுவும்!! சுவிஸ்லாந்து பிரசாந்தனும்!! பொலிசாரின் கண்டு பிடிப்பும்!!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் “ஆவா” குழுவினருக்கு சுவிட்ஷர்லாந்தின் தமிழ் அமைப்பொன்று உதவியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த அமைப்பே ஆவா குழுவினருக்கு நிதியுதவியையும்,ஆலாசனைகளையும் வழங்கிவந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் யாழில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் பிரதான சந்தேகநபரிடம்  பொலிஸார் முன்னெடுத்த  விசாரணைகள் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுவிட்ஷர்லாந்தில் இயங்கி வரும் குறித்த குழு இன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பு விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த அமைப்பானது ஆவா குழுவில் உள்ள பிரசாந்தன் என்பவருடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ளதாகவும்,அவரது அறிவுரைக்கமையவே ஆவா குழு செயற்பட்டு வருவதாகவும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரசாந்தன் எனப்படும் குறித்த நபரை தான் ஒரு​போதும் கண்டதில்லை என்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.