யாழ் பிரபல பாடசாலை மாணவிகள் ஆண் உறைகளுடன் பிடிபட்டனர்!!

யாழ் பிரபல படசாலை மாணவிகள் சிலர் தமது வகுப்பில் வைத்து ஆண் உறைகளுடன் ஆசிரியையிடம் பிடிபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  தரம் 10 ல் கல்வி பயிலும் குறித்த மாணவிகள் பாடசாலை தவனைப் பரீட்சை முடிவடைந்த பின்னர் வகுப்பில் வைத்து ஆணுறைகளை ஊதி விளையாடியுள்ளனர். அத்துடன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த ஏனைய வகுப்பு மாணவிகளையும் குழப்பியுள்ளனர். இதனையடுத்து குறித்த வகுப்புக்கு ஆசிரியை ஒருவர் சென்ற போது அவர்கள் வைத்திருந்த பலுான்களில் சந்தேகம் கொண்ட ஆசிரியை அவற்றைப் பரிசோதித்துள்ளார். அது கருத்தடைக்கான உறை என அறிந்து அவர்களை அதிபரிடம் அனுப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அதிபர் விசாரணை செய்த போது ஒரு மாணவி திருமணமான தனது அக்காவின் வீட்டில் குறித்த உறைகளை எடுத்துக் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்த வகுப்பில் தங்கியிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அதிபரால் கடுமையான முறையில் அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்