கிளிநொச்சியில் சிப்பைத் திறந்து தனது ஆண் உறுப்பை யுவதிக்கு காட்டிய ஆமிக்கு நடந்த கதி

வன்னியில்பேரூந்தில் பயணித்த பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பினை திறந்து காட்டிய இலங்கைஇராணுவச்சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழங்காவிலில் உள்ள கஜபா படைமுகாமை
சேர்ந்த இராணுவச்சிப்பாய் ஒருவரே இன்று படைமுகாமில் வைத்து கைதாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த தமிழ் பெண் பயணித்த தனியார் பேருந்திலேயே இராணுவசிப்பாயும் பயணித்துள்ளார்.அதே பேரூந்தில் பெருமளவிலான பொதுமக்களும் பயணித்துள்ளனர். இந்நிலையினில் திடீரென தனது காற்சட்டை சிப்பை அகற்றி அந்தரங்க உறுப்பினை குறித்த இராணுவச்சிப்பாய் காண்பித்துள்ளார்.

பின்னர் பேரூந்திலிருந்து தனது படைமுகாமினில் இறங்கி சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சக பயணிகளிடம் தெரிவித்ததையடுத்து முழங்காவில் காவல்நிலையத்தில் இது
தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் படைமுகாமில் வைத்து சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளைய தினம் குறித்த சிப்பாய் கிளிநொச்சி நீதிவான் முன்னலையில் ஆஜர்படுத்தப்படுவாரென காவல்துறை தெரிவித்துள்ளது.