01. 12. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ரிஷபம்

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மிதுனம்

சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கடகம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். வராது என்றிருந்த பணம் வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

துலாம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

விருச்சிகம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

தனுசு

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

மகரம்

நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

கும்பம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை