கொழும்பில் பதுங்கியிருந்த யாழ் வாள்வெட்டுக் குழு உறுப்பினர்கள் அதிரடிக் கைது!!

கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது.யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டனா் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரே கைது செய்யப்பட்டனர்
.
இந்நிலையில், சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும்  விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர் .