27. 11. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மிதுனம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

சிம்மம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

கன்னி

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

துலாம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

தனுசு

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

மகரம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கும்பம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மீனம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்