திருகோணமலையில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் கைது

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நிறுத்தி வைத்திருத்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடி சென்றதாக சந்தேகநபருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அக்போபுர, அக்போகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் சந்தேகநபரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.