யாழ் மானிப்பாயிலும் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!! நான்குபேர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்னிரவு நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில்நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 4 பேர் மீதே இனந்தெரியாத
நபர்கள் குறித்த தாக்குதலினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொழும்பு செல்வதற்காக ஆயத்தமாகி நின்றவர்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர்
குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளார்.

முன்னிரவு 7.30 மணியளவில் சுமார் 10 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கு நின்றிருந்த
அனைவரையும் வாளினால் வெட்டியுள்ளனர். அத்துடன் வீட்டின் பொருட்கள் அனைத்தையும் சுக்குநூறாக
நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் படுகாயமடைந்த நிலையில் நான்கு பேர் யாழ் போதனா வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்.