முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் பவீந்திரன் பலி!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள ரெட்பான இளங்கோபுரம் கிராமத்தில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மோதுண்டு விபத்துக் குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மூங்கிலாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6. 30 மணியளவில் நடை பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் உள்ள ரெட்பான சந்தியில் இருந்து இளங்கோபுரம் நோக்கி பயணித்த இருசக்கர உழவு இயந்திரத்தின் சாரதி திடிரென வீதியை ஊடறுத்து தனது வீட்டுப்பக்கமா இரு சக்கர உழவு இயந்திரத்தை திருப்பிய போது எதிர் திசையில் தனித்தனியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ரெட்பான நோக்கி பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் இருசக்கர உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மூங்கிலாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக அவர் உயிரிழந் துள்ளார்.

இச் சம்பவத்தின் போதுஇ

இளங்கோபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகிரி – பவீந்திரன் வயது – 22 என்ற இளைஞரே பரிதாபகரமாக உயிரிழந் துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத ப‌ரிசோதனை‌ களுக்காக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.