விஜய் படத்தை பற்றி கருத்து தெரிவித்த தன்ஷிகா

மீரா கதிரவன் இயக்கத்தில் நடிகை தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அப்போது நடந்தவை குறித்து வெளிப்படையாக  பேசியுள்ளார் நடிகை தன்ஷிகா.

விழித்திரு படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிகா, தம்பி ராமய்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி புதிய படங்கள் தீபாவளிக்கு வெளிவராமல் நிறுத்தி  வைத்தனர்.

விஜய் படம் குறித்து தன்ஷிகா, தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது. மற்ற  படங்களும், எங்கள் படங்களும் கவனிக்கப்படவில்லை. காசு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதுதான்  எனக்கு அப்போது புரிந்தது." என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.

"நான் இப்பொழுது தைரியமா பேசவில்லை என்றால் வேறு எப்போதும் பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் கான்செப்ட் நன்றாக இருந்தால் படம் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை. இவ்வாறு அவர்  பேசியுள்ளார்.