‘சார்லி சாப்ளின் 2’ கதையை இப்போதே வெளிப்படையாகச் சொன்ன இயக்குநர்

‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் கதையை இப்போதே வெளியில் சொல்லிவிட்டார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தொடங்கியிருக்கிறது. நிக்கி கல்ரானி, அதா ஷர்மா இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர்.

பிரபுதேவா - நிக்கி கல்ரானி இருவருக்கும் திருப்பதியில் கல்யாணம் நடக்க இருக்கிறது. அதற்காக, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் திருப்பதி போகின்றனர். போகும்போதும், போனபிறகும் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் காமெடியாகத் தயாராகிறது என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.