புனேவில் ‘கலகலப்பு 2’ ஷூட்டிங்

சுந்தர்.சி இயக்கிவரும் ‘கலகலப்பு 2’ படத்தின் ஷூட்டிங், புனேவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

‘சங்கமித்ரா’ படம் தொடங்க தாமதமானதால், ‘கலகலப்பு 2’ படத்தின் ஷூட்டிங்கை அதிரடியாகத் தொடங்கினார் சுந்தர்.சி. ஜெய், ஜீவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடிக்க, முதல் பாகத்தில் நடித்த ‘மிர்ச்சி’ சிவா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

சதீஷ், ரோபோ சங்கர், வையாபுரி, சந்தான பாரதி, மனோபாலா, விடிவி கணேஷ் என காமெடிப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் புனேவில் தொடங்கியிருக்கிறது.