கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது தொடங்குகிறது தெரியுமா?

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படம் ‘இந்தியன் 2’. ஷங்கர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். அதன்பின் ஒரு மாதம் ஓய்வெடுத்துவிட்டு, மார்ச் மாதத்தில் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார் ஷங்கர். 2019 மார்ச் மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். பொதுவாகவே ஒரு படத்தை இரண்டு வருடங்கள் எடுப்பார் ஷங்கர். ஆனால், இந்தப் படத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் அரசியல் திட்டமிடலும், ஷங்கரின் திட்டமிடலும் ஒத்துவந்தால், ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்துவிடலாம். அதில் மாற்றங்கள் ஏற்பட்டால், படப்பிடிப்பிலும் மாற்றங்கள் ஏற்படும்.