சிம்பு என்னை எப்போதும் கைவிடமாட்டார்: மேடையில் பிரபலம் உருக்கம்!!

பாரிஜாதம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய தரண். அதன் பின்னர் சிம்புவுடன் போடா போடி படத்தில் பணியாற்றினார்.

தற்போது தரண் சிம்புவை பற்றி மிக உருக்கமாக நிகழ்ச்சி மேடையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர். அப்போது என்னுடன் பல நண்பர்கள் சேர்ந்தார்கள்.

அதில் பலர் உதவி செய்தார்கள். உதவிய அனைவருக்கும் நன்றி. ஆனால், பலர் என்னை கைவிட்டுள்ளார்கள். ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பது STR மட்டுமே என தரண் தெரிவித்துள்ளார்.