பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம்

போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­ன பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நேற்று தெல்லிப் பழை ஆதார மருத்து வமனையில் ஆரம்­ப­மா­ன­து.

போரால் அவயவங்கள் பாதிக்கப் பட்டு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய வட பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு இலவசமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படு கின்றது.

நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை சத்திரசிகிச்சை நடை பெறவுள்ளது.

பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான அமெரிக்கா வைச் சேர்ந்த கலாநிதி திசேரா தலைமையில் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கொண்ட 30 பேர் அடங்கிய குழு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றது.