யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ரவுடிகளின் வாள்வெட்டு அதிர்ச்சி வீடியோ (Video)

யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும்யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன்,
ஈச்சமோட்டை வீதிப் பகுதியிலும் ஒருவர் மீது நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் உள்ள சலவைத் தொழிலகத்தின் உரிமையாளர் மற்றும் சலவைத் தொழில் நிலையத்தின்
நபர் மீதும் வேள்வெட்டு மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, ஈச்சமோட்டை பகுதியில் முச்சக்கரவண்டியில்
வந்த இருவர் இளைஞர் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர்.

இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகிய கலைச்செல்வன் (வயது 47) கவின்றோ (வயது 48) அ.சுஜீவன்
(வயது 21) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஈச்சமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தொடர்பான கண்காணிப்புக் கமெராக்
காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.