காரை பரிசளித்த பிரபாஸ்; காதலை கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள்

நடிகை அனுஷ்கா ஷெட்டி நவம்பர் 7ஆம் தேதி தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் கொடுத்த காஸ்ட்லி பரிசு பற்றிதான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வரும் நிலையில், அனுஷ்காவின் 36வது பிறந்தநாளில் அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இது கன்ஃபர்மாக காதல்தான்  என்று கூறி வருகின்றனர்.

ஏற்கனவே பிரபாஸ் பிறந்தநாளைக்கு விலை உயர்ந்த டிசைனர் கைக்கடிகாரத்தை, பரிசாக அளித்தார் அனுஷ்கா என்பதனை ரசிகர்கள் பலரும் நினைவுபடுத்தி காதலை உறுதி செய்துள்ளனர். ஆனால் உண்மையில் என்னவென்பது அவர்கள் உறுதிபடுத்தும்  வரை அது வதந்தியாக மட்டுமே இருக்கும்.

பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப்  இல்லாமல் நடித்து வருவதாக கூறப்படுகிறது.