இயக்குநர் சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிரபல தொகுப்பாளினி

பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சங்க தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா,  விளாயாட்டிலும் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் தொகுப்பாளினியான இவர் ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற  மாசிலாமணி, வனமகன் படத்தில் கேரக்டர் ரோல்கள் செய்துள்ளார். இயக்குநர் சமுத்திரகனி நடிக்கும், ‘சங்க தலைவன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெற்றி மாறன் இயக்கும் இப்படத்தில் கைத்தறி நெசவாளர்கள் பிரச்சனையை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் நெசவாளர் சங்கத் தலைவராக நடிக்கிறார் சமுத்திரக்கனி. அவரது மனைவி  கதாபாத்திரத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.  படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

சமுத்திரக்கனி படம் இயக்குவதற்கு ஓய்வு கொடுத்து, தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். அவர் நடித்து முடித்துள்ள கொளஞ்சி படம் வெளியாக உள்ளது. இதுதவிர ஆண்தேவதை, ஏமாலி, காலா, பேரன்பு, மதுரை வீரன், போன்ற படங்களில்  நடித்து வருகிறார்.