துப்பறிவாளன் வீட்டிலேயே திருட்டா... கோலிவுட்டில் பரபரப்பு!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பெருப்பில் இருக்கிறார். 

இதை தவிர்த்து படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார்.

தற்போது அவர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக அவரது மேனேஜர் புகார் அளித்துள்ளார். அண்ணா நகரில் உள்ள விஹால் வீட்டில் தங்க நகைகள் காணமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது வீட்டில் வேலை செய்து வந்த புஷ்பா என்பவர் சமீபத்தில் வேலை விட்டு நின்றுவிட்டதாகவும். அவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பெயரில் புஷ்பாவையும் மற்றும் சில கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.