அறம் படத்தை பாராட்டிய அமலாபால் - வச்சு செய்த நெட்டிசன்கள்

சமீபத்தில் வெளியான அறம் படத்தை நடிகை அமலாபால் பாராட்டி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அறம்.  சமூகப் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் நடிகை அமலாபால் தனது டிவிட்டர் பக்கத்தில் “சிறந்த திரைப்படம் வெற்றி பெறும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவிற்கும், இயக்குனர் கோபிநாயருக்கும் வாழ்த்துக்கள். ஹீரோக்களுக்காக மசாலா கதைகளை மட்டுமே உருவாக்கும் சினிமா உலகத்தில், அறம் படம் ஃபார்முலாவை உடைத்துள்ளது. நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு இதுதான் விஷயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் ‘பிறகு ஏன் நீங்கள் மசாலா படங்களில் நடிக்கிறீர்கள்?’, ‘ உங்களின் அடுத்த ரிலீஸ் திருட்டுப்பயலே 2’, சிந்து சமவெளி? என்ன ரகம்? என கேள்விகளால் துளைக்கத் துவங்கிவிட்டனர்.