தொல்புரம் அம்மனையும் பக்தர்களையும் குளிக்க விடாது கேணிக்குள் கழிவு ஒயில் ஊற்றிய காவாலி!!

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் வடக்குப் புறமாக அமைந்திருக்கும் கேணியில் இளைஞர்கள் நீந்தி விளையாடுவது வழக்கம் .நேற்று (12-11-2017) மாலை 4:00 மணியளவில் இளைஞர்கள் நீந்தும் போது ஆலயக் கடமையில் ஈடுபடும் அம்மனின் அடியவர் ஒருவர் குறித்த கேணியில் வாகனக் கழிவு ஒயிலை ஊற்றி நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களையும் விரட்டியுள்ளார்.

இதனால் இளைஞர்களுக்கும் குறித்த அடியவருக்கும் முறுகல் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதையடுத்து அங்கு கூடிய ஆலயபரிபாலன சபையினர் இவர்களை சமாதானப்படுத்தி கழிவொயில் ஊற்றியவரை கண்டித்துமுள்ளனர்.