வடமாகாணத்தின் மன்னார் உட்பட மூன்று மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரத் தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மின்சாரத் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், CTB மன்னார், கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, ரைமேக்ஸ் கார்மென்ட், விசேட அதிரடிப்படை

முகாம், எருக்கலம்பிட்டி பம் கவுஸ், பேசாலை Paalmayrah House, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார்

கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் மின் தடைசெய்யப்படவுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம், குருக்கலூர், பறயனாலங்குளம், நீலியாமோட்டை ஆகிய பகுதிகளிலும் மின் தடைப்பட்டிருக்கும்.

மேலும், காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணத்தின் அச்செழுப் பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.