மதில் பாய்ந்து வீட்டுக்குள் செல்ல முற்பட்டவர்களுக்கு நடந்த கதி!!

மதில் பாய்ந்து வீட்டு வளா­கத்­துக்­குள் புகுந்து திருட முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் இரு­வ­ரைத் தாம் கைது செய்­துள்ளனர் என யாழ்ப்பாணப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம், கொய்­யாத்­தோட்­டம் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்­றது.  இரு­வ­ரும் வீட்டு மதில் பாய்ந்து உள்ளே சென்­று திருட முற்­பட்­ட­போது அங்­கி­ருந்­த­வர்­கள் கூக்­கு­ர­லிட அய­ல­வர்­கள் ஒன்­று­ சேர்ந்து அவர்­க­ளைப் பிடித்­து தம்மிடம் ஒப்படைத்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு­வ­ரும் விசா­ர­ணை­யி­லுள்­ள­னர் என்றும் அவர்கள் திருட முற்பட்டது உறுதியானால் வழக்குத் தாக் கல் செய்யப்படும் எனவும் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.