யாழ் பிரதான வீதிப் பகுதியில் இருவர் மீது கோர வாள் வெட்டு!!

யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள்.

இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த இருவரும் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் குருநகர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது47) கவின்றோ (வயது48) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலிஸார் மேற்கொண்டுள்ளனர்.