“நேர்மையான மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன்” - காஜல் அகர்வால்

திருமணம் செய்து கொள்வதற்காக நேர்மையான மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அஜித் ஜோடியாக ‘விவேகம்’, விஜய் ஜோடியாக ‘மெர்சல்’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது ‘குயின்’  படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

காஜலிடம் திருமணம் குறித்துக் கேட்டால், “இப்போதைக்குத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து  பயணிக்கவே விரும்புகிறேன். ஆனால், என் பெற்றோர்கள் திருமணத்துக்கு வற்புறுத்துகின்றனர். நல்ல தோழராக, நேர்மையான  மனிதராக தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒருவரைக் காணும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என்கிறார்.

காஜலுக்குப் பிறகு சினிமாவில் அறிமுகமாக அவருடைய தங்கை நிஷா அகர்வால், பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம்  செய்துகொண்டு குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.