காதலியின் படத்துக்கு மாய்ந்து மாய்ந்து புரமோஷன் செய்யும் இயக்குநர்

காதலி நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள படத்துக்கு, இளம் இயக்குநர் மாய்ந்து மாய்ந்து புரமோஷன் செய்து வருகிறாராம்.

பெரிய நம்பர் நடிகை கலெக்டராக நடித்துள்ள படம், இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோருமே பாராட்டிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை, நடிகையே தன்னுடைய மேனேஜரை பினாமியாக்கி எடுத்ததாக சொல்லப்படுகிறது.

வேறு இரண்டு பெரிய படங்களும் ரிலீஸாகியிருக்கும் இந்த சமயத்தில், இந்தப் படம்தான் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும், தன்னாலான உதவியாக படம் பற்றி ஏகப்பட்ட ட்வீட்டுகளைப் பதிவிட்டு வருகிறாராம் காதலரான இளம் இயக்குநர். படத்தின் பெயரைப் பார்த்தாலே ரீட்வீட்டும் செய்து வருகிறார்.