வடக்கில் ஒரே நாளில் இருநூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது பொலிஸ்!

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­யில் 200க்கும் மேற்­பட்­டோர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இலங்கை பொலிஸ்மா அதி­ப­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நாடு பூரா­க­வும் நேற்­று­முன்­தி­னம் இர­வி­லி­ருந்து நேற்று அதி­காலை வரை பொலி­ஸார் பல சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

வடக்கு மாகான பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் தலை­மை­யில் சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

வடக்கு மாகா­ணத்­தில் சமூ­க­வி­ரோத செயல்­கள்,போதைப்­பொ­ருள் கடத்­தல்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் இந்த சுற்­றி­வ­ளைப்­பின் ஊடக பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பாண பொலிஸ் பிரிவு, காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரிவு, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய இடங்­க­ளில் சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சுமார் 2 ஆயி­ரம் பொலி­ஸார் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்கு மாகா­ணம் முழு­வ­து­மாக 3 ஆயி­ரத்து 500க்கு மேற்­பட்­ட­வர்­க­ளி­டம் சோத­னை­கள் மற்­றும் விச­ரா­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

2 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான வாக­னங்­கள் சோத­னை­யி­டப்­பட்­டன. இந்த சோதனை நட­வ­டிக்­கை­யில் 70க்கும் மேற்­பட்ட சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­கள் உட்­பட போதை­யில் வாக­னம் செலுத்­தி­யோர் என சுமார் 150 க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்த சுற்­றி­வ­ளைப்­பில் போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸா­ரும் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அவர்­கள் வாக­னங்­களை சோத­னை­யிட்ட போது சிறு குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 220 பேருக்கு தண்­டம் அற­வி­டப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.