யாழ் நகரப் பகுதியில் எல்லை கடந்த பயங்கரவாதம்!! பாதசாரிகள் பாடு திண்டாட்டம்!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள ஜெட்வின் ஹோட்டலுக்கு அருகில் பாதசாரிகள் நடக்க முடியாதவாறு பாதசாரிகள் கடவையில் சங்கிலிகள் போட்டு தடை செய்துள்ளதாக அப்பகுதியால் நடந்து செல்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் முன்னர் கொமேர்சியல் வங்கி இருந்த பகுதியில் உள்ள கட்டடம் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டடம் ஒன்று அமைப்பதற்காக நிலம் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் தெருவிலும் கடைகளுக்குள்ளும் அருகில் உள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்குள்ளும் புழுதிகள் அள்ளி வீசப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இது தொடர்பாக யாழ் மாநகரசபை மற்றும் குறித்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

எமது செய்தியால் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கருத்துச் சொல்லவிரும்பின் எமது மின்னஞ்சல் முகவரிக்கு newjaffna@gmail.com தகவல்களை தெரிவிக்கலாம்.

துாசை வாரி இறைக்கும் பகுதி இது

துாசை வாரி இறைக்கும் பகுதி இது