புத்துாரில் பிடிபட்ட கள்ளன்!!

புத்தூர் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அத்தியாவசியப்பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கும் அதிகாலை 5:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 50ஆயிரத்திற்கு உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை புத்தூரில் கடை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் மாலை 5:00 மணியளவில் இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர்.