12. 11. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ரிஷபம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மிதுனம்

சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக்கூற வேண்டாம். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

கன்னி

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

துலாம்

அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

மகரம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கும்பம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மீனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு