யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் நடக்கும் அந்தரங்கங்கள் வெளிப்படுகின்றன!! இதோ தகவல்கள்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத்
தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் ரஜிந்தன் எனும் சந்தேக நபர் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


இந்த நிலையில் அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு
எடுக்கப்பட்டது. இதன்போதே ரஜிந்தன் தொடர்பான விடயமும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் முன்னிலையாகி,
குறித்த இளைஞருக்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் ரஜிந்தன் என்பவரே
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவியிடமிருந்து உணவுப் பொதியை பெற்று வந்து
தருமாறு கேட்டுக் கொண்டதாகவும் அந்த உணவுப் பொதியினுள் கஞ்சா இருப்பது தெரியாமல்
கொண்டு வந்த போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசிகளை பாவிப்பது தடைசெய்யப்பட்டிருப்பினும்,
யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் பல கைதிகள் கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதாகவும்,
சிறையிலுள்ள வாள்வெட்டு சந்தேகநபர்களுடைய முகநூல்கள் இயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அர்ப்பணிப்பான நேர்மையான பல அதிகாரிகள்  கடமையாற்றினாலும்
இதற்கு ஒரு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதாக விமர்சிக்கப்படுவது
குறிப்பிடத்தக்கதாகும்.

Share